விருதுநகர், கள்ளக்காதல் தகராறில் 3 வயது பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 23) இவரது மனைவி சுவாதி (வயது 22) இவர்களது மகள் விஷ்ணு பிரியா (வயது 3) சுவாதி அதே பகுதியில் உள்ள தனிஅயர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். கள்ளக்காதல் அப்போது அங்கு வேலைபார்த்த திருத்தங்கல் பெரியார் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சுவாதிக்கும் அவரது கணவர் துரைப்பாண்டிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி கடந்த 25 நாட்க்ளுக்கு முன்பு கணவரை பிரிந்தார். அவர் குழந்தையுடன் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பசும்பொன் நகர் பகுதியில் வசித்து வந்தார். சுவாதியுடன் அவரது கள்ளக்காதலன் விக்னேஸ்வரன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த சுவாதியின் உறவினர்கள் அவரை பார்த்து குழந்தையின் நலன் கருதி கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக சேர்ந்து வாழுமாறு கூறினர். அவர் அதனை ஏற்கவில்லை. துரைப்பாண்டியுடன் வாழ முடியாது என்று திட்டவட்டமாக கூறிய சுவாது. விக்னேஸ்வரன் தான் தன்னுடைய கணவர் என்று கூறினார். துரைப்பாண்டியனும் பல முறை மனைவியை சந்தித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். சுவாதி அவரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். தினமும் குடித்து விட்டு பிரச்சினை இந்தநிலையில் கள்ளக்காதலன் விக்னேஸ்வரன் தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியுடன் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. விக்னேஸ்வரன் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி சுவாதியை அழைத்துள்ளார். அதற்கு சுவாதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், 3 வயது குழந்தை விஷ்ணு பிரியாவின் தலைமுடியை இழுத்து, முகத்தில் நகத்தால் கீறி, வயிற்றில் சரமாரியாக அடித்து கொடூரமான முறையில் தாக்கினார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thief-who-took-the-life-of-a-3-year-old-girl




