சென்னை, காவிரி நீரைப் பெறவும், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமரிடம் பேசாதது ஏன்? இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களுக்கு சில கேள்விகள்: 1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்? 2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? 3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்? நிவாரணத் தொகுப்பு எங்கே? 4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை? 5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது? 6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே? காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிக்கிறது! காவிரி டெல்டா விவசாயிகள் தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து - காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு. குறுவையும் பாதித்து - சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர். நெருக்கடியான இச்சூழ்நிலையில், முதல்-அமைச்சர் அவர்கள் பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் முதல்-அமைச்சரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை. போர்க்கால நடவடிக்கை மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக! குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு "புதிய நிவாரணத் தொகுப்பினை" அறிவித்திடுக! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-break-his-silence-dmk-leader-mk-stalin




