விக்கிரவாண்டி, சனி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அன்று முகூர்த்த நாளையொட்டி சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து சென்றன. இன்று முகூர்த்தம் முடிந்து நாளை அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்பதால் தென் மாவட்டங்களை நோக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் சென்னை நோக்கி திரும்பின. இதனால் திருச்சி-சென்னை சாலையில் வாகனங்கள் அணிவகுத்ததால் விக்கிரவாண்டி டோல் கேட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது.சென்னை நோக்கி அதிகமான வாகனங்கள் சென்றதால் கூடுதலாக மூன்று வழிகள் திறந்து மொத்தம் ஒன்பது வழிகள்மூலம் வாகனங்கள் சென்னை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன. விக்கிரவாண்டி வடக்கு புறவழி சாலை முனையில் மேம்பால பணி நடைபெறுவதால் தெற்கு புறவழிச்சாலை முனையிலிருந்து டி.எஸ்.பி.,அலுவலகம் வரை சர்வீஸ் சாலையை கடக்க முடியாமல் வாகனங்கள் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து சென்றன.நேற்று மாலை 6 மணி வரை 40ஆயிரத்து 740 வாகனங்கள் டோல்கேட் டை கடந்து சென்றன மேலும் கூடுதலாக வாகனங்கள் செல்லும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-traffic-congestion-on-the-trichy-chennai-national-highway
