சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் முதல்-அமைச்சரின் அலுவலகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாலும், நிர்வாகக் காரணங்களினாலும் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:- நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதல்-அமைச்சசரின் சமூக ஊடகப்பிரிவு (CMO Social Media), செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் திரு. அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையைச் சார்ந்த திருவாளர்கள். பாஸ்கரன், ரவிச்சந்திரன், அ. வே. சுரேந்திரன் மற்றும் த. கலைச் செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளம் (2000 சதுர அடி) ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் காலியாக உள்ள இடத்தினை ஆய்வு செய்து, மேலே கூறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான இடத்தினை ஒதுக்கீடு செய்து, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையினை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு அத்துறைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கோட்டப் பொறியாளர் (கட்டடங்கள்), பொதுப் பணித்துறையை, மேலே மாற்றம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணிணி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்துதருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார். 2. முதல்-அமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் (பின்வரும் பட்டியலில்) அதற்கு எதிரே தெரிவிக்கப்பட்டுள்ள இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகின்றன:- 3. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொது (கட்டடங்கள்)த்துறைக்கு ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலும் கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்துப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட துறையின் அலுவலக நடைமுறைப் பிரிவு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 4. உதவி செயற்பொறியாளர் (கட்டடம்), பொதுப்பணித் துறை மேலே மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இட மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். 5. உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். 6. பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி (Internet) செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 7. பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கெனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-announcement




