சென்னை, சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று கவர்னர் அர்லேகர் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பொறுப்பு கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- சாலமன் பாப்பையா பிரபல தமிழ் பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பெருமைக்குரியவர் தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiah-death-news-deeply-saddens-me-governor-arlekar




