தாளவாடி, தாளவாடி அருகே ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தைப்புலி நேற்று அதிகாலை சாலையோரத்தில் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் சிறுத்தைப்புலியை பாத்ததும் காரை நிறுத்தினார். பின்னர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். தொடர்ந்து சிறிது நேரம் அங்கு உலா வந்த சிறுத்தைப்புலி சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. வனத்துறையினர் எச்சரிக்கை இந்த மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தைப்புலி நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், கேர்மாளம் சாலையில் உலா வருகிறது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, கீழே இறங்கவோ கூடாது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-found-roaming-on-the-road-near-asanur




