பென்னாடம், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணை கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 110 அடியை தாண்டியது. இந்த நிலையில் தற்போது குடகில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 377 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 426 கனஅடியாக குறைந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.04 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 170 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணை அதேபோல் வயநாட்டில் மழை பெய்யாததால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 480 கனஅடியாக குறைந்துள்ளது. ஆற்றில் இருந்து வலது, இடது கால்வாய்களில் வினாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடி நீரும், ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,270.65 அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நரசிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13 ஆயிரத்து 770 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. 3-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 11,000 கன அடி இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது விநாடிக்கு 11,000 கன அடியாக நீடிக்கிறது. பரிசல் இயக்க தடை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coracle-operations-suspended-at-hogenakkal-for-the-16th-consecutive-day




