புதுடெல்லி, பெரு நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கெய்கோ புஜிமோடி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அவர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், பெரு நாட்டின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கெய்கோ புஜிமோரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”பெரு நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக கெய்கோ புஜிமோரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரு நாட்டுடனான நெருங்கிய நட்புறவை இந்தியா மிகவும் மதிக்கிறது. அத்துடன் பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. உங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதுடன், இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவை மேலும் வலுவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.” இவ்வாறு அதில் பிரதமர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/keiko-fujimori-elected-as-the-new-president-of-peru-prime-minister-modi-extends-congratulations




