எவ்வளவு எடை லக்கேஜ் கொண்டு செல்லலாம் ரெயில் பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்லும் லக்கேஜ்கள் அதிக அளவு இருந்தால் அபராதம் விதித்து விடுவார்களோ என அச்சம் ஏற்படலாம். பயணி ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு வரை எடையில் லக்கேஜ் கொண்டு செல்லலாம் என்பதற்கு ரெயில்வே நிர்வாகம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு; வகுப்பிற்கு ஏற்ப லக்கேஜ் எடை மாறுபடும் பயணிகள் பயணம் செய்யும் வகுப்பிற்கு ஏற்ப லக்கேஜ் எடை மாறுபடும். முதல் ஏ.சி. வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் ஒரு பயணி அதிகபட்சமாக 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.யில் 50 கிலோ வரையிலும் உடைமைகளை இலவசமாக கொண்டு செல்லலாம். ரெயில்வேயின் விதிமுறை அதேபோல், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 40 கிலோ வரையிலும், சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 40 கிலோ வரையிலும் மற்றும் 2-ம் வகுப்பு அமரும் வகையிலான பொதுப் பெட்டியில் 35 கிலோ வரையிலும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக உடைமைகளை எடுத்துச் செல்ல ரெயில்வே அனுமதிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் லக்கேஜ் தேவைப்பட்டால், அதற்கு ஒரு குறிப்பிட்ட கூடுதல் அனுமதியும் வழங்கப்படுகிறது. பயணிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எடையைத் தாண்டி, கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை ரெயில்வேயின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லக்கேஜ் கவுண்டரில் பணம் கட்டி எடுத்துச் செல்லலாம். கூடுதல் எடை இருந்தால் அபராதம் இந்த வரம்பை மீறி கூடுதல் லக்கேஜ்கள் எடையுடன் எடுத்து செல்லும் பட்சத்தில், பயணத்தின் போதோ சோதனையில் கண்டறியப்பட்டால், அதிகப்படியான எடைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட எடையைவிட லக்கேஜ்களின் எடை அதிகமாக இருந்தால், அதற்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தைவிட 6 மடங்கு வசூலிக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/attention-passengers-do-you-know-the-maximum-amount-of-luggage-you-can-carry-while-traveling-by-train




