வாஷிங்டன், அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தை சேர்ந்த பிரபல கின்னஸ் சாதனையாளர் டேவிட் ரஷ், தனது 3 வயது குட்டி மகள் பெலிசிட்டியுடன் இணைந்து ‘ஹூலா ஹூப்’ விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தந்தை-மகள் கூட்டணி விறுவிறுப்பு நிறைந்த இந்த சவாலில், தந்தை டேவிட் ரஷ் சுழற்றி வீசும் ஹூலா ஹூப் வளையத்திற்குள், 3 வயது சிறுமி பெலிசிட்டி மிக துல்லியமாக பாய்ந்து குதிக்க வேண்டும். கண்சிமிட்டும் நேரத்திற்குள் செய்ய வேண்டிய இந்த சாகசத்தை, தந்தை-மகள் கூட்டணி மிக நேர்த்தியாக செய்து காட்டியுள்ளது. புதிய கின்னஸ் உலக சாதனை இதற்கு முன்பு இந்த விளையாட்டில் 8 முறை வளையத்திற்குள் குதித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தகர்த்தெறிந்த இந்த ஜோடி, வெறும் 30 விநாடிகளில் 9 முறை மிக துல்லியமாக வளையத்திற்குள் புகுந்து தாண்டி புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்து வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. சர்ப்ரைஸ் கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் தபால் மூலம் டேவிட் ரஷ் வீட்டிற்கு வந்து சேர்ந்தன. சான்றிதழ்கள் கைக்கு வந்தவுடன் அதை யாரிடமும் காட்டாத டேவிட், தனது முழு குடும்பத்தையும் திடீரென ஒன்றாக அமர வைத்தார். பின்னர், யாருக்கும் தெரியாமல் தனது பையிலிருந்து சான்றிதழ்களை எடுத்து, தனது மனைவி மற்றும் மூத்த மகன்களான ஜெரமி, பீட்டர் ஆகிய மூவரிடமும் கின்னஸ் சான்றிதழை வழங்கி அதிர வைத்தார். இன்ப அதிர்ச்சி இறுதி கட்டமாக, 3 வயது குட்டி பெண் பெலிசிட்டியின் பிஞ்சு கரங்களிலும் அவளது முதல் அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழை கொடுத்து ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சான்றிதழை கண்டதும் பெலிசிட்டியும் குடும்பத்தினரும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர். வரலாற்று சாதனை டேவிட்டின் மூத்த மகன்களான ஜெரமியும் பீட்டரும் ஏற்கனவே தங்களது தந்தையுடன் இணைந்து வெவ்வேறு உலக சாதனைகளை செய்திருந்தனர். தற்போது, 3 வயது பெலிசிட்டியும் கின்னஸ் சான்றிதழை பெற்றதன் மூலம், டேவிட்டின் மூன்று குழந்தைகளும் ஒரே நாளில் தங்களின் முதல் அதிகாரப்பூர்வ உலக சாதனை சான்றிதழ்களை கையில் ஏந்திப் பிடித்துள்ள அரிய வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஒரே நாளில் 3 பிள்ளைகளும் உலக சாதனையாளர்களாக மாறியுள்ள இந்த கின்னஸ் குடும்பத்தின் புகைப்படம் தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/america-3-year-old-girl-sets-guinness-record



