ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ படம் 3 நாட்களில் ரூ. 80 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். ரவி தேஜாவின் 77-வது திரைப்படமான ‘இருமுடி கட்டு’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ‘மஜிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப பக்தராக ரவி தேஜா ‘இருமுடி கட்டு’ படத்தில், ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் ரவி தேஜா நடித்துள்ளார். ஆன்மிகம், உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கலந்த இந்தப் படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி தேஜாவின் வித்தியாசமான கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘இருமுடி கட்டு’ பாடல் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘இருமுடி கட்டு’ பாடலை அனந்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவ நிர்வாணா மற்றும் கல்யாண் சக்ரவர்த்தி இணைந்து எழுதியுள்ளனர். படத்தின் வசூல் இந்நிலையில், ரவி தேஜா நடித்த ‘இருமுடி கட்டு’ படம் 3 நாட்களில் ரூ. 80 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ravi-tejas-irumudi-kattu-film-collected-rs-80-crores




