சென்னை, தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் இந்த நிதியாண்டில், கால்நடை வளர்ப்பு கடனாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்புக்கு ரூ.3 ஆயிரம் கோடி கடன் தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை, மீன், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பிற வேளாண் தொடர்புடைய தொழில்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் இந்த நிதியாண்டில் ரூ.3 ஆயிரம் கோடி கடன் வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. திருச்சிக்கு ரூ.440 கோடி கடன் இதில், அதிக அளவாக திருச்சி மாவட்டத்தில் ரூ.440 கோடி கடன் தொகை வழங்கப்பட உள்ளது. இது தவிர, வேளாண் சாகுபடிக்கான பயிர்க் கடனை முழுமையாக நிலுவையின்றி செலுத்திய விவசாயிகளுக்கு, இந்த மாதம் 30-ம் தேதிக்குள் புதிய கடன்களை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/order-to-provide-rs3000-crore-in-livestock-farming-loans-in-tamil-nadu




