சென்னை, தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக இன்ஸ்பெக்டர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொழில் அதிபர் மிரட்டி சென்னை பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ரூ.40 லட்சம் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடத்தை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற புகாரி அதன் பிறகு சவுகார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் அகில் என்பவரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்துள்ளார். சஸ்பெண்ட் இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் புகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸ் இணை ஆணையர் ஒருவரது பெயரைச் சொல்லி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் பணத்தை பறித்த நிலையில் தொழிலதிபர் அளித்த புகாரை தொடர்ந்து மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/inspector-bukhari-suspended-after-complaint-of-extorting-rs-40-lakh-from-businessman




