பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன், வெற்றிவேல் (வயது: 27). துபாயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில், வயலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற வெற்றிவேல், மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்தச் சூழலில், நெடுவாசல் கிராமத்தில் செயல்படாமல் உள்ள கல்குவாரியின் கீற்று கொட்டகையில் வெற்றிவேல் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததாக பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் வெற்றிவேலின் தாயார் தனலெட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். வெற்றிவேல் அதன் பேரில் வெற்றிவேலின் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்தில் திரண்டனர். அதோடு, தகவல் தெரிவித்த சரவணனுக்கு, வெற்றிவேல் எப்படி இறந்தார் என்பது தெரியாமல் இருக்காது எனக்கூறி சரவணனை சரமாரியாகத் தாக்கினர். மேலும், மருவத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து, போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்குவாரியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/youth-found-dead-at-a-quarry-in-perambalur




