நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Mohanlal - Suchithra அந்தப் பேட்டியில் சுசித்ரா பேசுகையில், "ஒரு திருமண நிகழ்வில்தான் நான் மோகன்லாலை முதன்முதலாகப் பார்த்தேன். எங்கள் இரண்டு குடும்பத்தினரும் ஏற்கெனவே மிகவும் நெருக்கமானவர்கள். ஒரு ரசிகையாக அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அந்தப் புகைப்படம் எனக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை. நான் மோகன்லாலைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னபோது குடும்பத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், என் தந்தை என்னிடம் சில விஷயங்களைத் தெளிவாகச் சொன்னார். 'அவர் சினிமா துறையில் இருப்பவர். படப்பிடிப்பு காரணமாகப் பல நாள்கள் வீட்டை விட்டு வெளியிலேயே இருக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும். Mohanlal - Suchithra ஒரு நடிகரைத் திருமணம் செய்துகொண்டு, நாளைக்கு அதனால் வரக்கூடிய பிரச்னைகளைச் சொல்லி என் முன்னால் வந்து அழுதால், நான் உன்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். என் தந்தை மோகன்லாலிடம், 'என் மகளை நன்றாகப் பார்த்துக்கொண்டு அவளைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டீர்கள்' என்று சொன்னார். அதற்கு மோகன்லால், 'நீங்கள் அவளை எவ்வளவு அன்பாகப் பார்த்துக்கொண்டீர்களோ, அதைவிட அதிகமாக என்னால் பார்த்துக்கொள்ள முடியாது அல்லவா?' என்று மிகவும் பணிவாகப் பதில் சொன்னார்" எனப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/mollywood/suchitra-mohanlal-first-meeting-father-warning-marriage-news




