புதுடெல்லி, உலகப் பொருளாதார வளர்ச்சியை விட பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் பொருளாதாரம் இரு மடங்கு வேகத்தில் வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 100 பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனங்கள் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- பிரிக்ஸ் தனது மூன்றாவது தசாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், பிரிக்ஸ் வர்த்தக மன்றத்திடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான முதல் பத்து வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து உங்களால் ஒரு அறிக்கையைத் தயாரிக்க முடியுமா? ஆண்டுதோறும் 100 பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனங்கள் மற்ற பிரிக்ஸ் சந்தைகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த நம்மால் ஆதரவளிக்க முடியுமா? நமது வணிகங்களுக்கு இடையே ஆயிரம் புதிய கூட்டாண்மைகளை நம்மால் உருவாக்க முடியுமா? இந்த மூன்று அளவுகோல்களில் நமது முன்னேற்றத்தை ஒவ்வொரு ஆண்டும் நாம் மதிப்பாய்வு செய்ய வேண்டும். பிரிக்ஸின் லட்சியங்களைச் செயலாகவும், நமது கூட்டு பலத்தை உலகளாவிய தீர்வுகளாகவும் மாற்றுவோம். பிரிக்ஸ் முன்னோக்கிச் செல்வதோடு, உலகையும் முன்னோக்கி எடுத்துச் செல்லட்டும். பெண் வணிகத் தலைவர்கள் கடல் வழித்தடங்கள் பாதுகாப்பாகவும், விநியோகப் பாதைகள் திறந்த நிலையிலும், மாலுமிகள் பாதுகாப்பாகவும் இருக்கும்போது மட்டுமே உலகளாவிய வர்த்தக முன்னேற்றம் சாத்தியமாகும். அதனால்தான், கடல் வழிப் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது. பிரிக்ஸ் பெண்கள் வர்த்தகக் கூட்டமைப்பு (BRICS Women’s Business Alliance) என்பதும் எங்கள் தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய பகுதியாகும். நமது வளர்ச்சிப் பயணத்தை பெண் தொழில்முனைவோர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் கூட்டத்தில் சுமார் 200 பெண் வணிகத் தலைவர்கள் பங்கேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பன்முகத்தன்மை இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கருப்பொருள் 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்பதாகும். கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியா இந்த மந்திரத்தையே தனது பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகளின் அடித்தளமாக அமைத்துள்ளது. மீள்திறனைப் பொறுத்தவரை, எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு துறைகளில் விநியோகச் சங்கிலிகளை இந்தியா மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது. இந்த மீள்திறனின் விளைவாகவே, உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா இன்று வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. நாங்கள் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விரைவாக விரிவுபடுத்தி வருகிறோம். ஸ்டார்ட் அப் புரட்சி அதேவேளையில், கப்பல் கட்டுமானம், குறைக்கடத்திகள் (semiconductors), குவாண்டம் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் புதிய திறன்களை உருவாக்கி வருகிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) நிதிச் சேர்க்கை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குப் பெரும் அளவில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இன்று, உலகின் நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவீத இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே நடைபெறுகின்றன. உலகின் நிலையற்ற தன்மைக்கு இடையே இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஸ்டார்ட் அப் புரட்சி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/brics-economies-growing-twice-the-pace-of-world-says-pm-modi



