தமிழ் சினிமாவில் 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' காமெடி உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை காட்சிகளில் நடித்திருப்பவர் டெலிபோன் ராஜ். தற்போது வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபமாக காமெடி தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் இவரைப் பார்க்க முடிகிறது. அடிப்படையில் திமுக உறுப்பினரான இவர், தேர்தல் நேரங்களில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரப் படங்களில் நடிப்பது, பிரச்சாரம் செய்வது ஆகிய வேலைகளைச் செய்து வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் கூட 'அடேங்கப்பா, இம்மாம் பெரிய திராவிடச் சுவர்' என டயலாக் பேசியபடி திமுகவின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திமுக-விலிருந்து விலகி தவெகவில் சேர முடிவு செய்திருக்கிறாராம். ராஜிடம் பேசினோம். திமுக தலைமையகம் ''பதினேழு வயசுல 1978ம் வருஷம் நடிக்க வந்தேன். இப்ப எனக்கு 64 வயசாகுது. இன்னும் எவ்வளவு நாள் இருப்போம்னு தெரியலை. ஆனா மிச்சமிருக்கிற அந்த நாட்கள் விஜய் சார் கட்சியில இருந்துட்டுப் போயிடலாம்ங்கிற எண்ணம் வந்திடுச்சு. வழக்கமா சிலர் ஜெயிக்கற கட்சிப் பக்கமா தாவிகிட்டே இருப்பாங்களே, அந்த மாதிரி என்னை நீங்க நினைச்சுடக் கூடாது. மாணவப் பருவத்துல இருந்து 64 வயசு வரை ஒரே கட்சியிலதான் இருந்திருக்கேன். ஆனா சகிச்சிட்டிருக்கிறதுக்கும் ஒரு எல்லை இருக்குதில்லையா? ஒரு ராத்திரி உட்கார்ந்து யோசிச்சதுல இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கத் தோணிடுச்சு. ஒண்ணுமில்லீங்க, ஆரம்ப காலத்துல வாங்கியிருந்த பழைய ஐடி கார்டை வச்சிருந்தேன். புதுப்பிச்சு தலைவர் கையால் புதுசா ஒரு கார்டு கேட்டேன். 'அதெல்லாம் உங்க ஏரியா பகுதி செயலாளர்கிட்ட இருந்துதான் வாங்கணும்'னு சொன்னாங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிட்ட அப்படியொரு கார்டு வாங்கிடலாம்னு அறிவாலயம் வாசல்ல பல நாள் காத்துக் கிடந்தும் அது நடக்கவே இல்லை. Sarkar கட்சிக்காக ஒண்ணு ரெண்டு விளம்பரப் படங்கள்ல நடிச்ச பிறகு வீட்டு வசதி வாரியத்துல குறைஞ்ச வாடகையில ஒரு வீடு கேட்டேன். எனக்குத் தெரிஞ்ச சிலருக்கு ஒதுக்கியிருந்ததால் 'அவங்களுக்கே தந்திருக்கிறப்ப நமக்குத் தரமாட்டாங்களா'னு நினைச்சு கேட்டேன். 'விலைக்கு வேணும்னா இருக்கு 40 லட்சம் ரெடி பண்ணுங்க'னு சொன்னாங்க. இல்லீங்க, எங்கிட்ட காசு இல்ல, வாடகைக்கு இருந்துட்டுப் போறேன்'னு கேட்டதை காதுலயே வாங்கிக்கலை. சாம்பிளுக்கு இந்த ரெண்டு. இன்னும் சில அவமானங்களும் இருக்கு. எல்லாத்தையும் பட்டியல் போட விருப்பமில்லை. மனம் வெறுத்திடுச்சு. கிளம்ப முடிவு செய்துட்டேன். விஜய் சார் கூட 'சர்க்கார்' படத்துல நடிச்சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அவருடன் பேசியிருக்கேன். இந்த தேர்தல்ல அவர் பெற்ற வெற்றி ஆச்சரியத்தைத் தந்தது. அதனால அவர் பக்கம் போகலாம்னு நினைக்கிறேன். இது தொடர்பா அங்க பேசிட்டேன். சீக்கிரத்துலயே அடுத்த சில நாட்கள்ல முறைப்படி சேர்ந்த செய்தி வரும்'' என்கிறார் இவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/humour-and-satire/cinema/actor-telephone-raj-soon-joined-in-tvk-soon




