திருவள்ளூர் திருவள்ளூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகை ரமணா நகரை சோந்தவர் கிரிதரன். தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகன் கவுதம் (வயது 16). ஆவடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். போலீசில் புகார் இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென கவுதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என தெரிகிறது. இதையடுத்து பெற்றோரை அழைத்து வரவேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் கூறி உள்ளனர். இந்த நிலையில் கவுதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/college-bilateral-clash-student-returns-home-dies-by-suicide




