தூத்துக்குடி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் ரோந்து பணி தூத்துக்குடி மாநகர், ரோச்பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, அங்கே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 6 கிலோ கஞ்சா பறிமுதல் இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் சந்தோசம் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-with-6-kg-of-ganja-in-thoothukudi




