சென்னை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும்போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித அழுத்தமும் இன்றி கையாள வேண்டும். தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது. இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/jem-veeramani-sexual-case-shocking-news-day-by-day-says-edappadi-palaniswami




