புதுடெல்லி, மத்திய அரசு துறைகளில் லோயர் டிவிஷன் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நிரப்பி வருகிறது. 12- ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் பின்வருமாறு: பணியிடங்கள்: லோயர் டிவிஷன் கிளர்க் (எல்.டி.சி)/ ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டண்ட், டேடா எண்ட்ரி ஆபரேட்டர், டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ ஆகிய பதவிகளில் மொத்தம் 2,536 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.1999 க்கு முன்பாகவோ 01.08.2008 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது. சம்பளம் எவ்வளவு? அதிகபட்சமாக ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறை: கணிணி வழியிலான இரண்டு கட்ட எழுத்து தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட் ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 07.10.2026 தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/education-and-employment/central-government-job-candidates-who-have-completed-plus-2-can-apply




