காலே, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே நகரில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தேவ்தத் படிக்கல் சாதனை இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் தற்போது 164 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய வீரர் படிக்கல் சாதனை படித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 3வது வரிசை வீரராக (ஒன் டவுன்) களமிறங்கி 150 ரன்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார். இதற்கு முன்பாக இலங்கைக்கு எதிராக 3வது வரிசை வீரராக களமிறங்கிய இந்திய வீரர்கள் ராகுல் டிராட் (177 ரன்கள் - 2009ம் ஆண்டு), புஜாரா (153 ரன்கள் - 2017ம் ஆண்டு) ஆகிய இருவர் மட்டுமே 150 ரன்களுக்குமேல் எடுத்துள்ளனர். தற்போது 150 ரன்களை கடந்த தேவ்தத் படிக்கல் இந்த சாதனை பட்டியலில் 3வது வீரராக இடம்பிடித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-sri-lanka-record-breaking-devdutt-padikkal




