சென்னை நிலவு முற்றிலும் அமைதியான துணைக்கோள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆய்வுகளின்படி, நிலவில் இதுவரை சுமார் 250 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்றாலும், சில அதிர்வுகள் பல மணி நேரம் நீடித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஸ்ரோவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கடந்த 2023, ஜூன் 14-ல், நிலவின் தென் துருவத்திற்கு, சந்திரயான்-3 எனும் விண்கலம் வாயிலாக, விக்ரம் லேண்டரை அனுப்பியது. 'சிவசக்தி' எனும் பகுதியில், விக்ரம் லேண்டர்தரை இறங்கியது. அதிலிருந்து பிரிந்த, 'பிரக்யான் ரோவர்' எனப் படும் ஆய்வு கருவி தொடர்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பில் இருந்து வெப்பத்தை கடத்தாததையும் அறிவித்தது. 10 செ.மீ, ஆழம் வரை, வெப்ப கவசமாக செயல்படுவதும், அந்த மண்பகுதி, ஆழத்திற்கு வெப்ப மண் அமைப்பில், மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் உள்ளதை உறுதி செய்தது. இதனால், நிலவு உருவான காலகட்டத்தில், மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயல்பட்டிருக்கலாம் என்பதை அறிய முடிந்தது. குறிப்பாக சிவசக்தி பகுதியில், 250-க்கும் மேற்பட்ட முறை, நில அதிர்வுகள் ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/250-sudden-moonquakes-detected-what-is-the-cause-isro-conducting-intensive-study




