டுப்லின், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெறவிருந்தது. ஆனால், கனமழை காரணமாக அப்போட்டி ரத்து செய்யப்பட்டது. 2 வது ஒருநாள் போட்டி இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அயர்லாந்தின் பிரிடி நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதேவேளை, இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 299 ரன்கள் குவிப்பு இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்துள்ளது. 300 ரன்கள் இலக்கு சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராகிம் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். அயர்லாந்து தரப்பில் அந்த அணியின் மார்க் அதிர், ஜெய் முந்திரா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/second-odi-afghanistan-set-strong-target-ireland




