சென்னை, ‘ஹாய்’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘ரசகுல்லா’ பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதுஇசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் விஷ்ணு எடவன் பாடல் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ‘ஹாய்’படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் விஷ்ணு எடவன் பாடல் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘ஹாய்’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘ரசகுல்லா’ பாடல் நாளை (ஜூலை 22) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nayantharas-hi-film-rasagulla-song-by-anirudh-releasing-tomorrow




