சென்னை, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:- கடந்த 1.1.2026 அன்று அல்லது அதற்கு பிறகு பணிநிறைவு பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்கள் மற்றும் பணிநி றைவுக்கு பின் இறந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) உள்ள தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர இடைக்கால உதவித்தொகை மற்றும் குடும்ப உதவித்தொகை வழங்கும் அரசாணை கடந்த 16.6.2026 அன்று நிதித் துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ, அத்தொகையுடன் 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டது. 6-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 1.1.2026 முதல் அகவிலைப்படி விகிதம் 262 சதவீதம் என்பதால், இவ்விதிகளில் திருத்தம் செய்து தற்போது புதிய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அதன் அடிப்ப டையில், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாகச் சம்பளம் பெற்று, 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமாக இருந்து. 7-வது ஊதியக்குழுவிற்கு மாற்றப்படாத ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் 262 சதவீத விகிதத்தில் வழங்கப்படும். 6-வது ஊதியக்குழுவின் கீழ் 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், இடைக்காலத்தில் குறைந்தபட்சத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும். ஆனால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி நிவாரணமாக கணக்கிடப்படும். இதனடிப்படையில் கருவூலக்கணக்கு ஆணையர் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-to-the-rules-regarding-monthly-interim-relief-for-government-employees




