சென்னை, தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை உயர்ந்து வந்து, 28, 29-ந்தேதிகளில் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையில் 2-வது நாளாக நேற்றும் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ25. உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை 3-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slightly-higher-gold-prices-what-is-the-situation-today




