புதுச்சேரியில் 2026-2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அது தொடர்பாக புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்காத தொலைநோக்கு பார்வையின்றி வெற்று அறிக்கையாக உள்ளது. ரூ.14,300 கோடி பட்ஜெட் என்று பெருமை அடிக்கின்றனர். அதில் அனைத்து செலவுகளையும் கழித்தால் மக்களுக்கான திட்டங்களுக்காக எஞ்சி நிற்பது வெறும் ரூ.2,200 கோடி மட்டும்தான். அதை வைத்து எந்த வளர்ச்சியை புதுச்சேரியில் எட்ட முடியும்? ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் வழக்கமான நிதி ஒதுக்கீடுகளை மட்டுமே வைத்து, புதிய திட்டங்கள் அல்லது பொருளாதாரத்தை உயர்த்தும் உத்திகள் எதுவும் இல்லாமல் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் கரசூரில் புதிய தொழிற்சாலை வருகிறது என்றனர். புதுச்சேரி பட்ஜெட் | முதல்வர் ரங்கசாமி தற்போது அந்த நிலத்தின் ஒரு பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் வரும் என்கின்றனர். அந்த 800 ஏக்கர் நிலம், 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. தற்போது அதையே மீண்டும் அறிவித்திருக்கிறார்களே தவிர, எப்படிப்பட்ட தொழிற்சாலைகள் வரப்போகிறது…. அந்தப் பணி எப்போது தொடங்கும்…. அதற்கான ஒதுக்கப்பட்ட நிதி என்ன போன்ற எந்தத் தகவலும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. சென்ற ஆண்டு பிரதமர் துவக்கி வைத்த ஏக்தா மால் திட்டம் எப்பொழுது நிறைவேற்றப்படும்? போக்குவரத்தை முறைப்படுத்த ராஜீவ்காந்தி–இந்திராகாந்தி சதுக்கங்களின் இணைப்பு மேம்பாலத்தின் தற்போதைய நிலை என்ன? பட்ஜெட்டில் அதற்கான நிதி எங்கே? விமான நிலைய விரிவாக்கம் ரூ.4,800 கோடியில் மதிப்பிட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டு பேசுகிறார். பட்ஜெட்டில் அதற்கான பதில் எங்கிருக்கிறது? கடந்த பட்ஜெட்டில் வில்லியனூரில் வேளாண்மை மண்டலம் மற்றும் சித்த மருத்துக்கல்லூரி அமைக்கப்படும் என்றும், புதுச்சேரியில் மருந்து பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதுபற்றி இந்த பட்ஜெட்டில் ஏதும் சொல்லப்படவில்லை. அதேபோல் மடுகரையில் கொண்டு வருவதாக கூறிய மாதிரிக் கல்லூரி என்ன ஆனது? லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் திறக்கப்படும் என்றீர்களே அது என்ன ஆனது? கிடப்பில் உள்ள இரயில்வே திட்டங்கள் பற்றி ஏதும் இல்லை. காரைக்கால் துறைமுகத்தை அரசே திரும்பப் பெறுவது சம்பந்தமான அறிவிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரி துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்துப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. அரசுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி அளவிற்கான மின் கட்டண பாக்கி, வரி வசூல் பாக்கி, கலால் துறை பாக்கிகளை முறையாக வசூல் செய்வதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. புதுச்சேரி அரசு புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதை பெருமையாக சுட்டிக்காட்டியிருக்கும் முதல்வர் ரங்கசாமி, தேர்தல் அறிக்கையில் கூறிய மாநில அந்தஸ்து, நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல், அரசுப் பேருந்துகளிலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணத்திட்டம் என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் பெயரளவிற்கு கூட சொல்லப்படவில்லையே ஏன்? இருப்பதை வைத்து அரசை நடத்தலாம் என்பது சரி வராது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் பா.ஜ.க–என்.ஆர்.காங்கிரசின் அதிகார போட்டிதான் நடந்ததே தவிர, இவர்களின் இரட்டை என்ஜின் ஆட்சி எந்தவித சிறப்புத் திட்டங்களையும் புதுச்சேரிக்கு கொண்டுவரவில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த பட்ஜெட் புதுச்சேரி மக்களை ஏமாற்றும் வழக்கமான கணக்கு வழக்கே தவிர, மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய பட்ஜெட் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார். புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/puducherry-dmks-criticism-regarding-the-budget-as-the-ruling-government-failed-to-bring-the-special-schemes



