வாஷிங்டன், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரித்தி சவுகான், அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறு வயது முதலே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதீத ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்க கடற்படையின் இளைஞர் பிரிவான 'சீ கேடட்' அமைப்பில் இணைந்தார். இவரது கடின உழைப்பு, தலைமைப் பண்பு மற்றும் அசாத்திய திறமைகளைக் கண்டு வியந்த கடற்படை நிர்வாகம், தற்போது இவருக்கு மிக உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது. பொதுவாக அனுபவமிக்க அதிகாரிகளுக்கு மட்டுமே வழங் கப்படும் 300 கடற்படை வீரர்களை வழிநடத்தும் 'ரெஜிமென்டல் கமாண்டர்' பொறுப்பு ரித்தி சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கண்காணிப்பது மற்றும் அணிவகுப்புகளைவது தலைமை தாங்கி நடத்துவது போன்ற முக்கியப் பணிகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் கடற்படையில், ஒரு இளம் இந்திய வம்சாவளி பெண் இத்தகைய உயரிய பதவியை அடைந்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/indian-origin-student-leads-300-men-in-us-navy




