புதுடெல்லி, ஒருங்கிணைப்புக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பெரும் அதிர்வலைகள் எழும்பியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்து ஆலோசிக்க கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் கட்சித் தலைவி சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி (எஸ்பி) எம்.பி. சுப்ரியா சுலே, டிஎம்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சிபிஐ(எம்) தலைவர் எம்.ஏ. பேபி மற்றும் பிற கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையம் முற்றுகை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களும் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவர்களைக் கைப்பாவைகளைப் போல ஆட்டிவைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடுவது குறித்து அனைத்துக் கட்சிகளும் விவாதித்தன. இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும். வருகின்ற 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டங்களை நடத்துவோம். வருகிற 6-ந்தேதி அன்று அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க நேரம் கோருவோம். அவரிடம் தேர்தல் ஆணையம் எவ்வாறு கையகப்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவோம். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐந்து பெரிய பேரணிகள் நடத்தப்படும். அதற்கான இடங்களும் தேதிகளும் விரைவில் இறுதி செய்யப்படும். 'வாக்குத் திருட்டு' குறித்து ராகுல் காந்தியும் மம்தா பானர்ஜியும் கூறிவந்ததை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்வதால், நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் ஒரு பெரிய பேரணி ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/india-alliance-announces-siege-of-election-commission-on-the-6th




