ஒட்டாவா, கனடாவைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் காலமான தனது மனைவியின் நினைவாக உலகையே உலுக்கும் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார். மனைவியின் இழப்பும் சபதமும் கனடா நாட்டின் ஒண்டாரியோவின் முஸ்கோகா பகுதியில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் நகரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் மார்க் ஹெர்பஸ்ட் (வயது 69). இவரின் அன்பு மனைவி ஜாக்கி ஹெர்பஸ்ட்டின், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொடிய 'ஸ்குவாமஸ் செல் கேன்சர்' பாதிப்பால் தனது 55-வது வயதில் காலமானார். சுமார் 7 ஆண்டுகள் புற்றுநோயோடு போராடி மறைந்த தனது மனைவியின் பிரிவு, மார்க்கிற்கு பேரிழப்பாக அமைந்தது. இந்த துக்கத்திலிருந்து மீளவும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்தவும் அவர் ஒரு சபதம் எடுத்தார். கின்னஸ் சாதனைப் பயணம் தன் மனைவியின் நினைவைப் போற்றும் வகையில், கடந்த ஜனவரி 7, 2025-ம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து தனது மிதிவண்டிப் பயணத்தை அவர் தொடங்கினார். 324 நாட்கள் தொடர்ச்சியாகப் பயணித்து, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளைக் கடந்து, 30,000 கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதன் மூலம், உலகைச் சுற்றி மிதிவண்டியில் வலம் வந்த மிக வயதான நபர் என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார். திரட்டப்பட்ட நிதி கரடுமுரடான மலைப்பாதைகள், உறைபனி மற்றும் சுட்டெரிக்கும் வெயில் போன்ற கடுமையான இயற்கைச் சவால்களுக்கு மத்தியில், சுமார் 50 கிலோ எடையுள்ள தனது உடைமைகள் அடங்கிய மிதிவண்டியிலேயே அவர் தங்கிப் பயணித்தார். இந்த வரலாற்றுப் பயணத்தின் மூலம், டொராண்டோவில் உள்ள 'பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்காக' $70,000-க்கும் அதிகமான நிதியை (இந்திய மதிப்பில் ரூ.46,00,000-க்கும் மேல்) அவர் திரட்டி, அதற்கான காசோலையை கடந்த மாதம் பிப்ரவரி 3-ந்தேதி வழங்கியுள்ளார். "என் மனைவியின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்திற்கு ஒரு அர்த்தத்தைத் தேடித் தொடங்கிய இந்த சாகசப் பயணம், எனக்கு பல வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது," என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மார்க் ஹெர்பஸ்ட். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/69-year-old-cycles-30000-km-around-the-world-and-raises-70000-for-cancer-research




