நெல்லை, சேலம், காட்பாடி வழியாக நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில் உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிரயாக்ராஜ் நகரம் அமைந்துள்ளது. வடக்கு மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04171) வருகிற நாளை (சனிக்கிழமை), 26-ந்தேதி, அக்டோபர் 3-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய சனிக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்ப டுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லை-பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் (04172) நெல்லையில் இருந்து வருகிற 21-ந்தேதி, 28-ந்தேதி, அக்டோபர் மாதம் 5-ந்தேதி. 12-ந்தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது. எத்தனை பெட்டிகள்? இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜபல்பூர் வழி யாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 12 தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-tomorrow




