கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் நேற்று திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டம் வட்டவட பகுதியில் தேயிலை தோட்டப்பகுதியில் நேற்று மதியம் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த வீடு இடிந்தது. வீட்டின் இடிபாடுகளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி கொட்டகம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது51), அவரது சகோதரி சின்னு (45) ஆகியோர் இறந்தனர். மேலும் மாரியம்மா என் பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை மீட்டு, துணியால் தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். மேலும் காயமடைந்த மாரியம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/three-people-including-a-woman-from-chennai-die-after-getting-caught-in-a-landslide-in-kerala




