தஞ்சை, தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் விசிக பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மறியலை மீறி பைக்கில் செல்ல முயன்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தடுக்க வந்த காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளைஞர் ஒருமையில் பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவலர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. கைது இதையடுத்து அந்த இளைஞரும் காவலரின் கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-slaps-si-on-cheek-uproar-in-thanjavur




