இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஆகஸ்ட் 11-ந் தேதி (செவ்வாய்) * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம். * திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை. * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் விருட்சப சேவை. * சமநோக்கு நாள். 12-ந் தேதி (புதன்) * ஆடி அமாவாசை. * திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம். * சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. * காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம். * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் பவனி. * கீழ்நோக்கு நாள். 13-ந் தேதி (வியாழன்) * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம். * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி. * திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார் கோவில் சவுந்திரநாயகி தலங்களில் ரத உற்சவம். * கீழ்நோக்கு நாள். 14-ந் தேதி (வெள்ளி) * ஆடிப்பூரம். * அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம். * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் பவனி. * படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. * கீழ்நோக்கு நாள். 15-ந் தேதி (சனி) * நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி. * நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக் காட்சி. * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலத்தில் தவக்கோலம். * மேல்நோக்கு நாள். 16-ந் தேதி (ஞாயிறு) * நாக சதுர்த்தி. * திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் பவனி. * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆவணி பெருவிழா தொடக்கம். * மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு. * சமநோக்கு நாள். 17-ந் தேதி (திங்கள்) * கருட பஞ்சமி. * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம். * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல். * சமநோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-11th-august-2026-to-17th-august-2026




