நெல்லை, நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சிவசக்தி சாலையில் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் 2 சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் முத்துராமலிங்க தேவரின் நினைவு பீடம் உள்ளது. அந்த பீடத்தின் அருகே நேற்று நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- கடுமையான நடவடிக்கை திருநெல்வேலி தச்சநல்லூர் ஊருடையான்புரம் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் பீடத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டும் தேச விரோத சக்திகளின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-muthuramalinga-thevar-peetham-vanathi-srinivasan-condemns



