சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வும், நிதித்துறை அமைச்சருமான மரிய வில்சன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``0.37 ஏக்கரில், ரூ.2.50 கோடி திட்டச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத் திட்டம், முந்தைய தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலேயே கட்டப்பட்டிருக்கிறது. கட்சி வேறுபாடின்றி மேயர், எம்.பி, கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உட்பட அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணாமலை முதலமைச்சரின் லண்டன் முதலீட்டுப் பயணத்தை வீ தி லீபர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அவர் பா.ஜ.க தலைவராக இருந்திருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். அதனால் அவர் முதிர்ச்சியான தலைவர் என்று நினைக்கிறேன். ஆனால், அவரிடமிருந்து இப்படியான விமர்சனம் நல்லதில்ல எனக் கருதுகிறேன். தற்போதைய சர்வதேச பொருளாதாரச் சூழலில், சிறிய அளவிலான முதலீடுகள் கூட மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. AI உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஆட்குறைப்பு நிலவும் சூழலில், முதலமைச்சரின் முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகளைக் கேலி செய்வது பொருத்தமானது அல்ல. ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தின் காரணமாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. ஆகஸ்ட் 2025-ல் ரூ.96,567 கோடியாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், ஆகஸ்ட் 2026-ல் ரூ.1,09,104 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 12% வளர்ச்சியாகும். அதேபோல, மொத்த வருவாய் வரவு ரூ.1,08,460 கோடியிலிருந்து 8.60% உயர்ந்து ரூ.1,17,790 கோடியை எட்டியுள்ளது. பத்திரப் பதிவு மற்றும் ஜிஎஸ்டி துறைகளில் இருந்த கசிவுகள் அடைக்கப்பட்டதே இந்த வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணம். மரிய வில்சன் அரசு நிதி மேலாண்மையைச் செம்மையாகக் கையாண்டு வருகிறது. காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் பால் கொள்முதல் விலை அதிகரிப்பு போன்ற செலவினங்கள் இருந்தாலும், திறமையான வருவாய் திரட்டல் மூலம் கடன் சுமை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 2026-ல் மாநிலத்தின் நிகரக் கடன் 19% வரை குறைந்துள்ளது. இந்த 4 மாத ஆட்சியிலேயே இவ்வளவு கடன் குறைந்திருக்கிறது. இன்னும் வரும் மாதங்களில் கூடுதலாகக் குறையும்" என்றார். "ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க."- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/minister-maria-wilson-has-spoken-about-criticism-from-annamalai




