வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தவுடன், "எனக்கு வயசாகிடுச்சு, இனிமேல் புதிதாக என்ன சாதிக்கப் போகிறேன்?" என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ஆனால், உடலுக்குத் தான் வயதாகிறதே தவிர, உள்ளத்திலிருக்கும் தேடலுக்கும், உத்வேகத்திற்கும் ஒருபோதும் வயதாவதில்லை என்பதை நினைவூட்டும் அற்புதமான பொன்மொழியைக் கூறுகிறார் பிரபல எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ். (You are never too old to set another goal or to dream a new dream) "புதிய இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவு காணவோ உங்களுக்கு ஒருபோதும் வயதாகிவிடவில்லை." Quote of the Day: சி.எஸ்.லூயிஸ் Quote of the day: 'நம் திறமை மற்றவர்களின் விமர்சனத்தில் இல்லை!' - எலினோர் ரூஸ்வெல்ட் வாசகம் இதற்கு ஒரு அழகான நிஜ வாழ்க்கை போன்ற கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 75 வயதான கமலா பாட்டி, தன் பேரப்பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பார். அவருக்கு சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டும், தன் பெயரைத் தானே கையெழுத்திட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இளமைக் காலத்தில் வறுமை, பிறகு குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கை அவரை வேறு திசையில் இழுத்துச் சென்றுவிட்டது. பேரப்பிள்ளைகள் கல்லூரி செல்லும் வயதை எட்டியபோது, கமலாவின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அந்த 'கல்வி' கனவு மீண்டும் விழித்துக்கொண்டது. ஊரில் புதிதாகத் தொடங்கப்பட்ட முதியோர் கல்வி மையத்தில் தயங்கித் தயங்கிப் போய் நின்றார். "இந்தத் தள்ளாடுற வயசுல இதெல்லாம் தேவையா?" என்று ஊர்க்காரர்கள் சிலர் சிரித்தார்கள். ஆனால் அவர் அதைச் சட்டை செய்யவில்லை. கண்களில் தடிமனான கண்ணாடி அணிந்து கொண்டு, சிறு குழந்தையைப் போல சிலேட்டில் எழுத்துக்களை எழுதப் பழகினார். Quote of the day: 'நாம் நாமாக இருப்பதே மாபெரும் சாதனை!' - ரால்ப் வால்டோ எமர்சன் தத்துவம்! சில மாதங்கள் கழித்து, வங்கிக்குச் சென்ற கமலா பாட்டி, தடம் பதியாத தன் பெருவிரல் ரேகையை வைப்பதற்குப் பதிலாக, பேனாவை வாங்கி சற்று நடுங்கும் கைகளால் 'கமலா' என்று அழகாகக் கையெழுத்திட்டார். அப்போது அவர் முகத்தில் மலர்ந்த அந்தச் சிரிப்பு இருக்கிறதே. அது 75 வருடக் காத்திருப்பின் வெற்றி! கமலா பாட்டியைப் போலத்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். 30 வயதில் ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு மாறுவதற்கோ, 40 வயதில் புதிய தொழில் தொடங்குவதற்கோ, அல்லது 60 வயதில் நமக்குப் பிடித்த இசையையோ, ஓவியத்தையோ கற்றுக்கொள்வதற்கோ நாம் தயங்குகிறோம். "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்ற சமூகத்தின் கேள்வியை விட, நமக்குள் எழும் அகத்தயக்கமே நமது பெரிய எதிரி. சி.எஸ். லூயிஸ் சொல்வது போல, உங்கள் முந்தைய இலக்குகள் அல்லது கனவுகள் தோல்வியடைந்திருக்கலாம். அதற்காக புதிய கனவே காணக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. Quote of the Day: சி.எஸ்.லூயிஸ் உங்கள் மனதின் ஏதோ ஒரு மூலையில், என்றோ நீங்கள் புதைத்து வைத்த கனவு இப்போதும் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கலாம். அது ஒரு புத்தகம் எழுதுவதாக இருக்கலாம், புதிய மொழி கற்பதாக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய தோட்டம் அமைப்பதாகக் கூட இருக்கலாம். உங்கள் இலக்குகளுக்கு 'காலாவதி தேதி' கிடையாது. விழித்திருக்கும் ஒவ்வொரு காலையும் நமக்குத் தரப்படும் புதிய வாய்ப்பு. எனவே, வயதை ஒரு தடையாக நினைக்காமல், இன்று உங்களுக்கான புதிய கனவைத் துணிச்சலாகத் தொடங்குங்கள். உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த அத்தியாயம் இனிமேல் தான் எழுதப்பட உள்ளது! Quote of the Day: 'தன்னம்பிக்கை தானாக வராது' - எழுத்தாளர் பிரையன் ட்ரேசி கூற்று! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/lifestyle/motivation/age-is-no-barrier-to-dreams-tamil-motivation




