பாட்னா, பீகாரில் நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் நேற்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னாவில் மாணவர்கள் பேரணி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சந்தப் சவுரவ் தலைமையில் ஏராளமான மாணவர்கள், தலைநகர் பாட்னா அருகேயுள்ள காந்தி மைதானத்தில் இருந்து லோக் பவன் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீசாருடன் மோதல் பேரணி லோக் பவன் அருகே சென்றபோது, போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நிலைமை மோதலாக மாறியதில், சில போலீசார் காயமடைந்து ரத்தக் காயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியதுடன், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மாணவர்கள் கைது போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/neet-irregularities-issue-student-protests-intensify-in-bihar




