சென்னை, 21 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலசுழற்சி நிலவுகிறது மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும்குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அதனுடன் கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சிமுதல், தெற்குஉள்கர்நாடகா வரை மத்திய வங்ககடல் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் வழியாக கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரைஒரு காற்றழுத்தத்தாழ்வுப் பாதை நிலவுகிறது. சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலசுழற்சி நிலவுகிறது. 21 மாவட்டங்களில் மழை தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-21-districts-tomorrow




