சென்னை, அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லுாரிகளுக்கான, 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, முதல்கட்ட கலந்தாய்வு நிறைவில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 295 பி.இ.,- பி.டெக்., இடங்கள் நிரம்பின. மீதம், 56 ஆயிரத்து 530 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான துணை கலந்தாய்வு விண்ணப்பபதிவு, கடந்த ஆக., 17 முதல் 31 வரை நடந்தது. மொத்தம்,14 ஆயிரத்து 500க்கும் அதிகமான மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை, இன்று மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-admissions-last-day-for-supplementary-counselling-today



