சென்னை, தமிழகத்தில் ஆற்று மணல் மூடப்பட்டுள்ள குவாரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் எவ்விதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாமல் மவுனம் காக்கப்பட்டு வருவதால், குவாரிகள் திறக்கப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த ஆற்று மணல் குவாரிகளில், மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இயங்கி வந்த 13 மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து புதிய குவாரிகளைத் திறக்கச் சுற் றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட போதிலும், ஒப்பந்த தாரர்களை இறுதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களால் குவாரிகள் திறக்கப்படாமல் இருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நியாயமான முறையில் குவாரிகள் திறக்கப்பட்டு மணல் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்கு மாதங்களைக் கடந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபுவை நேரில் சந்தித்து குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், இதுகுறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் உரிய பதிலளிக்காமல் மவுனம் காப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மணல் குவாரிகள் திறக்கப்படுமா இல்லையா என்பதில் தொடர்பாக குழப்பம் நிலவி வருவதால், லாரி உரிமையாளர்களும் கட்டுமானத் தொழிலாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/quarries-issue-water-resources-department-officials-remain-silent-lorry-owners-are-in-distress




