சென்னை, தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை இணை கூடுதல் செயலாளராக ஷ்ரேயா பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ராஜ கோபால் சுங்காரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ராஸிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் துறை இணை செயலாளராக ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை செயலாளராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக சுகபுத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) தாகரே சுபம் தந்தியோரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக வீர் பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பொன்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரீன் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ias-officers-transfers-tamil-nadu-government-order




