காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 73 ஆயிரம் பேர் பலி அதேவேளை, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒப்பந்தம் பின்னர், அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்பட பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சியால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அதேவேளை, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அக்டோபர் 7 - கடத்தல் இதனிடையே, அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நோவா அர்கமானி என்ற பெண்ணையும் அவரது காதலனான அவினாதன் ஆர் என்ற இளைஞரையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலிய இளம்பெண் நோவா அர்கமானியை பைக்கில் கடத்தி செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், 2 ஆண்டுகள் கழித்து ஒப்பந்த அடிப்படையில் நோவா அர்கமானியும் அவரது காதலன் அவினாதன் ஆரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் விடுதலை செய்யப்பட்டனர். ஹமாஸ் தளபதி பலி இந்நிலையில், அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலிய இளம்பெண் நோவா அர்கமானியை கடத்திச்சென்ற ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். சஹீர் நிடல் சகியுர் என்ற அந்த ஹமாஸ் தளபதி காசா முனையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசிரத் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/hamas-commander-who-kidnapped-israeli-woman-killed




