சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் 200-க்கும் மேற்பட் டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னையில் 79 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 228 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் 17 ஆயிரத்து 277 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அங்கு விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், டெங்கு அறிகுறிகள் காணப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த தட்டை அணுக்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் வகுப்புகளுக்கு வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 29 பேருக்கு உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-200-people-are-affected-by-dengue-daily-in-tamil-nadu




