மதுரை உயர் நீதிமன்ற கிளையில் காவலர் குடும்பநல அறக்கட்டளை தலைவர் சத்யபிரியா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் போலீசார் தினமும் அதிக நேரம் பணிபுரிவதால் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியமால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியில் சுதந்திரத்திற்குப் போராடியவர்களை ஒடுக்குவதற்கு பட்டாலியன் படை உருவாக்கப்பட்டது. அவர்கள் போன பல மாநிலங்களில் பட்டாலியன் படை கலைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சிறப்புக் காவல் பட்டாலியன் என்கிற பெயரில் 16 ஆயிரம் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு அழைத்து செல்வதற்கு அரசுக்குத் தேவையற்ற போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. ஒரு இடத்தில் பிரச்னை என்றால் முதலில் செல்வது சட்டம் ஒழுங்கு போலீசாரும் அதன்பின் ஆயுதப்படை போலீசாரும் கடைசியாகத்தான் பட்டாலியன் போலீசார் வருகின்றனர். இவர்கள் உயரதிகாரிகள் தங்களுடைய வீட்டு வேலைகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். சிறப்புக் காவல் பட்டாலியனின் பணிகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தத் துறையைய மறுசீரமைப்பு செய்து சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைக்க பரிசீலிக்க வேண்டும். காவலர்கள் அனைத்து போலீசாரும் தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த் திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, “தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோர் 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் உத்தரவு” பிறப்பித்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு எதிரான வழக்கில் மறு விசாரணையா? - உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-bench-of-madras-high-court-on-8-hour-workday-for-police-personnel



