சென்னை, தமிழக அரசின் மருத்துவம், மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “மத்திய பா.ஜ.க. அரசை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.தான். தேர்தலுக்கு முன்பும், ஜனநாயகன் பட விவகாரத்தின்போது, கரூர் விவகாரத்தின்போதும் த.வெ.க.வுக்கு எந்த அளவிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். த.வெ.க.வுக்கு பலம் கொடுப்பது என்னவென்றால் நாங்கள் உண்மையாக இருக்கிறோம், அச்சப்படும் அளவிற்கு எங்களிடம் எந்த குற்றமும் இல்லை என்பதுதான். தி.மு.க.வுக்கு தான் அந்த அச்சம் இருக்கிறது. அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனவே அவர்கள்தான் மத்திய அரசுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவித சமரசமும் இல்லாமல் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-the-only-party-that-genuinely-opposes-the-bjp-minister-arunraj



