கொல்கத்தா, கொல்கத்தாவில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமி, பணத்துக்காக விபசார விடுதி பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் பேச்சை நம்பி மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஷபிகுல் மொல்லா (20) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் காதல் வார்த்தைகளை ஷபிகுல் மொல்லா தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி அவரை நம்பி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கண்ணீருடன் பேசிய சிறுமி பின்னர் கொல்கத்தாவில் இருந்த சிறுமி, போலீஸ் உதவி எண் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணை தொடர்புகொண்டு, தன்னை காப்பாற்றுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி தெரிவித்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரை பத்திரமாக மீட்டனர். 2 பேர் கைது இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் காதலன் ஷபிகுல் மொல்லா (20) மற்றும் சஹருல் லஸ்கர் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை எவ்வாறு அழைத்து சென்றனர், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/16-year-old-girl-tearfully-calls-police-pleading-save-me-shocking-act-by-her-boyfriend




