சென்னை, கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில், வரும் டிச., 1ம் தேதி முதல், 18 மாதங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. உற்பத்தி நிறுத்தம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திய அணு மின் கழகத்திற்கு சொந்தமான சென்னை அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 220 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாவது அணு உலையில் பராமரிப்புக்காக, 2018 ஜனவரி 30ம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இரண்டாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு சராசரியாக 150 மெகா வாட் வழங்கப்படுகிறது. வெயில் குறையாததால் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இரண்டாவது அணு உலையில் மேம்பாட்டு பணிகளுக்காக, வரும் டிச., 1ம் தேதி முதல், 18 மாதங்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மின் தேவை இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி கூறுகையில், “முதலாவது அணு உலையில் உற்பத்தி தொடங்க கோரி, பிரதமர் அலுவலகத்தில் பேசப்பட்டு உள்ளது. இரு அலகுகளிலும் ஒரே சமயத்தில் மின் உற்பத்தி முடங்கினால், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படும். இதுகுறித்து, இந்திய அணு மின் கழகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'முதலாவது அணு உலையில் டிச., 1ம் தேதி உற்பத்தி தொடங்கும் என்றும், அது செயல்பாட்டிற்கு வந்த பின்பே, இரண்டாவது அணு உலையில் மின்சாரம் நிறுத்தப்படும் என, அணு மின் கழகம் தெரிவித்துள்ளது” என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-at-kalpakkam-nuclear-power-station-production-halted-for-18-months




