திருப்பூர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 6-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இந்த ரெயில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணிக்கு போத்தனூருக்கும், 4.13 மணிக்கு திருப்பூருக்கும். 5.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 6.25 மணிக்கு சேலத்துக்கும், அடுத்தநாள் மதியம் 12.45 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும். இதுபோல் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் பெங்களூருவில் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 5.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை இரவு 9.25 மணிக்கு சேலத்துக்கும், 10.35 மணிக்கு ஈரோட்டுக்கும், 11.23 மணிக்கு திருப்பூருக்கும், 12.40 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-ernakulam-and-bengaluru-via-tiruppur




